The Vestal KeYREADER is an e-ink reader device. They will suit your taste as well as your budget, and also your purpose.
Browse, download, and enjoy your books with font size just right for your eyes, and no nagging messages running to pages.
Select from the range of applications we offer. And then never touch your PC.
Search
Search For:
in
தமிழன்பர்களே!
வெஸ்டலின் வணக்கம்.
அன்னைத் தமிழைத் அன்றாடம் கேட்கிறோம். ஊடகங்களில் ரசிக்கிறோம். வலைத் தளங்களில் காண்கிறோம். வலைப் பூக்களில் படிக்கிறோம்.
தமிழ் விளையாட இன்னொரு தளம் காணும் எங்களின் முயற்சியே, மின் – சுவடி.
கையடக்கமாய் புத்தகம் போலுள்ள வெஸ்டல் மின்னேடுகள், புதியதும் புரட்சிகரமானதுமான மின் – மை (e-ink) தொழில்நுட்பத்தால் அமைக்கப் பெற்றவை. கணிணி, மடிக்கணிணி இவைகளின் திரையகங்களைப் (LCD) போலல்லாது இவைகள் நம் கண்களுக்கு எவ்வித ஊறும் விளைவிப்பதில்லை.
இந்த மின் – சுவடிகளைக் கொண்டு புத்தகங்கள் படிக்கலாம். ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஒரே நேரத்தில் தன்னகத்தே சேமித்து வைக்கும் திறன் கொண்டவை இவை. உங்கள் மின் – சுவடிக்கு ஏற்ப வடிவமைக்கப் பட்ட பல தமிழ் புத்தகங்களை மின் – சுவடி வலைத் தளத்திலிருந்து (http://www.min-chuvadi.com/) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு இ-புத்தகக் கடையையும் வெகு விரைவில் எதிர்பாருங்கள்.
மாணவர்கள் தங்களது பாடநூற்கள், விளக்க உரைகள், கேள்வித் தாட்கள் போன்றவைகளை ஒரே மின் – சுவடியில் சேமித்துக் கொள்ளலாம். எவ்வளவு நேரம் வேண்டுமாயினும் மின் – சுவடி கொண்டு படிக்கலாம். இதன் மின்கல அடுக்கிற்கு (battery) ஒரு முறை மின்னூட்டம் ஏற்றிவிட்டால் குறைந்தது 24 மணி நேரம் பயன்படுத்தலாம்.
அலுவலர்கள் தங்கள் கோப்புகளை மின் – சுவடியில் சேமித்தி எங்கு, எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பார்க்கலாம்.
மின் – சுவடி பற்றி மேலும் அறிய ஆவல் தோன்றுகிறது அல்லவா? இதன் விவரங்களைத் தமிழில் அறிய மின் – சுவடி வலைத் தளம் காண்க.